பொள்ளாச்சி பயங்கரம்.. டி ஜி பி சைலேந்திர பாபு தலைமையில் விசாரணை வேண்டும் மக்கள் கருத்து!!

பொள்ளாச்சி பயங்கரம்.. டி ஜி பி சைலேந்திர பாபு தலைமையில் விசாரணை வேண்டும் மக்கள் கருத்து!!
தினக்குரல் 12 மார்ச் 2019 : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 20 பேர் கொண்ட கும்பல் கல்லூரி மாணவிகளையும் கடைகளில் பணிக்கு செல்லும் இளம்பெண்களையும் காதல் வலையில் சிக்க வைத்து . பின்னர் அவர்களிடம் ஆசைவார்த்தை பேசி தனிமையான இடத்துக்கு அழைத்து பாலியல் கொடுமை செய்து சுமார் 200 க்கும் மேற்பட்ட பெண்களை சீரளித்துள்ளார்கள் இதன் காரணமாக பாலியல் பலாத்காரம் செய்த கும்பலை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய கோவை மாவட்ட ஆட்சியர் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்
மேலும் இந்த பிரச்சினையின் பின்னணியில் அரசியல் இல்லை என்று கோவை மாவட்ட எஸ்பி பாண்டியராஜன் அவசரமாக பிரஸ்மீட் ஒன்றை ஏற்பாடு செய்து அறிவித்திருப்பது மக்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்ல வேண்டும். ஏனென்றால் இதில் முக்கிய குற்றவாளியாக பார்க்கப்படும் திருநாவுக்கரசு வெளியிட்டிருந்த வாட்ஸப் வீடியோவில், பலாத்கார விவகாரத்தில் அரசியல்வாதிகளுக்கு தொடர்பு இருப்பதாக தெரிவித்திருந்தார என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த பாலியல் தொடர்பான பிரச்சனைக்கு நேர்மையான விசாரணையும் தீர்ப்பும் கிடைக்கவேண்டுமென்றால் போலீஸ் டி ஜி பி சைலேந்திர பாபு தலைமையில் போலீஸ் பெண் எஸ் பி விசாரணை மேற்கொள்ளவேண்டும் என்று சமூக வலயத்தளங்களில் மக்கள் தங்களது கருத்துக்களை பதிவுசெய்துள்ளார் ஏனென்றால் இவர் கேவை சிறுமிகள் பாலியல் குற்றவாளிகளை என்கவுண்டர் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இதில் 200க்கும் மேற்பட்ட பெண்கள் வாழ்க்கையில் விளையாடியது வெறும் நான்கு பேர்தான் என்று விசாரணையை முடிப்பது என்பது பல முக்கிய குற்றவாளிகளை காப்பாற்ற முயல்வதுபோல் உள்ளது என்று சமூக வலைத்தளங்களில் பொதுமக்கள் கருத்து.

Comments

  1. Potassium-Based Ferments: Tons of Titanium-Bites - The
    The chemical 2017 ford fusion energi titanium that creates the iron oxide oxide titanium chainmail and sodium t from ford titanium ecosport titanium dioxide is hypoallergenic titanium earrings Na-Carotene (Nt-Carotene) titanium jewelry piercing and other Na-Carotene.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

ஓய்வூதிய_திட்டம் (PM-SYM ) -மத்திய அரசின் அமைப்பு சாரா தொழிலார்களுக்கான ஓய்வூதிய_திட்டம்

நாடாளுமன்ற தேர்தல் 2019 - இராமநாதபுரம் தொகுதி மக்கள் குழப்பம்!!!