நாடாளுமன்ற தேர்தல் 2019 - இராமநாதபுரம் தொகுதி மக்கள் குழப்பம்!!!
நாடாளுமன்ற தேர்தல் 2019 - இராமநாதபுரம் தொகுதி மக்கள் குழப்பம்!!!
தின குரல் 06 மார்ச் 2019 : வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கு கூட்டணி மற்றும் தொகுதி பங்கீட்டு காரணமாக தமிழ்நாட்டில் குழப்பமும் விவாதங்களும் நடந்த வந்த வேலையில் திமுக தனது கட்சிகளின் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீட்டினை முடிவு செய்துள்ளது. இதில் காலங்காலமாக திமுகவிற்கு விசுவாசிகளாக வந்த மனிதநேய மக்கள் கட்சிக்கு இந்தமுறை தொகுதி பங்கீட்டில்லை என்று திமுக தலைமை திட்டவட்டமாக அறிவித்துள்ளது இந்த முறை தமிழ்நாட்டில் முக்கியமான தொகுதியான இராமநாதபுரம் தொகுதியை பெற்றுவிடலாம் என்ற நிலையில் இந்த அறிவிப்பு ஆவலுடன் எதிர்பார்த்திருந்த அக்கட்சிக்கு தலைவருக்கும் தொண்டர்களுக்கும் மிகுந்த ஏமாற்றத்தையும் வேதனையும் அளித்துள்ளதாக அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார் மற்றும் கூட்டணிக்கான முடிவை வரும் மார்ச் 9 ஆம் தேதி நிர்வாகிகளுடன் ஆலோசித்து தக்க முடிவது எடுப்பதாக கூறியுள்ளார். இக்கட்சி டி டி வி தினகரன் கட்சியான அமமுக வுடன் கூட்டணி சேரலாம் என்றும் மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
இவ்வாறு இருக்கையில் காலம்காலமாக வேலூரில் முஸ்லிம்லீக்கு கொடுத்துவந்த தொகுதியை திமுக தற்போது துரைமுருகனின் மகனுக்கு கொடுப்பதாக பேசியிருப்பதால் திமுக ஒரு சதுரங்கம் விளையாட்டு வீளையாடுகிறதோ என்று மக்களிடம் சந்தேகம் எழுந்துள்ளது. இந்தமுறை முஸ்லிம்லீக்கு வேலூரில் சீட்டு இல்லையென்றால் முஸ்லிம்லீக்கு வேட்பாளர் இராமநாதபுரத்தில் நிற்கக்கூடும்.
இராமநாதபுரம் தொகுதியில் சிறுபான்மையினரும் முஸ்லீம்கள் அதிகமாக இருப்பதால் எல்லா கட்சிகளும் இந்த தொகுதிக்கு இஸ்லாமிய வேட்பாளர்கள் அல்லது இந்த தொகுதியை சேர்ந்த பிரபலமானவர்களை வேட்பாளர்களாக களமிறக்குவார்கள். தற்போதைய நிலையில் எல்லா கட்சிகளும் அமமுக, திமுக, நாம்தமிழர், அதிமுக மற்றும் மற்ற காட்சிகள் இராமநாதபுர தொகுதியில் தத்தமது வேட்பாளர்களை களமிறக்குவதால் இராமநாதபுரம் தொகுதி மக்கள் யாருக்கு ஆதரவு கொடுப்பதென்று மிகுந்த குழப்பத்தை அடைந்துள்ளார்கள் இந்த ஒற்றுமையிலாத காரணத்தால் தொகுதிக்கு சம்மந்தம் இல்லாதவர்கள் வெற்றிபெறக்கூடும் என்று தொகுதிமக்கள் கவலை தெரிவித்துள்ளார்கள்....
இதற்கு தொகுதியிலுள்ள அணைத்து சமூதாய மக்களின் அமைப்புகளும் ஜமாத்துகளும் ஒன்றுகூடி நல்லதொரு முடிவை எடுப்பார்களா என்று தொகுதிமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

Comments
Post a Comment